ட்ரம்ப் வருகையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Feb 13, 2020 09:00 AM 774

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகையின் போது 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது இந்தியா - அமெரிக்கா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படை அதிநவீன திறன் கொண்ட 24 ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதேபோல், இந்திய விமானப்படை 114 போர் விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பாதுகாப்புக்கான அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், 4 அல்லது 5 ஆண்டுகளில் 24 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Comment

Successfully posted