தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

Mar 25, 2019 04:55 PM 159

திமுக கூட்டணி சார்பில் தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெயர் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Comment

Successfully posted