அதிகாலையில் திடீரென பெய்த மிதமான மழை

Sep 11, 2019 06:16 AM 61

சென்னையில் அதிகாலை பெய்த மிதமான மழையின் காரணமாக பொதுமக்கள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் சென்னை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கடுமையான வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்துள்ள இந்த மழையானது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழையினால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

Comment

Successfully posted