நியூஸ் ஜெ செய்தி எதிரொலி : திருப்பரங்குன்றத்தில் ரயில் பாதை வேலி அமைப்பு...

Jul 26, 2019 09:29 PM 197

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக ரயில் பாதை வேலி அமைத்து மக்களை பாதுகாத்த தமிழக அரசுக்கும் ரயில்வே துறைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பரங்குன்றம் வழியாக தென் மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு அதிக அளவில் ரயில்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் ரயில் பாதையை கடப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க வேலி அமைக்க வேண்டும் என்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் கடந்த ஒன்றாம் தேதி செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழக அரசு சம்பந்தப்பட்ட ரயில்வே துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வேலி அமைத்து கொடுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted