சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது - முதலமைச்சர் பழனிசாமி!

Mar 29, 2021 09:10 PM 768

மழையே பெய்யாவிட்டால் கூட சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

 சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கசாலியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இன்னும் ஒரு வருடத்திற்கு சென்னையில் குடிநீர் பிரச்னையே ஏற்படாது என்றார். மீஞ்சூர் மற்றும் நெமிலியில் நாள் ஒன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

வரும் காலங்களில் மழையே இல்லாவிட்டால் கூட சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்பதே இருக்காது என குறிப்பிட்ட முதலமைச்சர், நாள் ஒன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நெமிலியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

 

அதனைத்தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கே மட்டுமே பதவி கிடைப்பதாகவும், மற்றவர்கள் வீதியில்தான் நிற்கிறார்கள் என்றும் சாடினார். சாலை விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாயும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக 62 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

 

பின்னர் சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து முதலமைச்ச பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சைதை துரைசாமி சென்னை மேயராக இருந்தபோது 3 லட்சத்து 2 ஆயிரம் பணிகளை மேற்கொண்டார். ஆனால் மா.சுப்பிரமணியனோ 9 ஆயிரம் பணிகளை மட்டுமே மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். சைதை துரைசாமியின் பணிகளுக்கும், மா.சுப்பிரமணியனுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ளதைப் போன்றது என்றார்.

 

சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் எனக் கூறிய ஸ்டாலின், உண்மையில் எதுவுமே செய்யாமல் பதவியை அனுபவித்துவிட்டது சென்றது மட்டும்தான் மிச்சம் என முதலமைச்சர் கூறினார்.

Comment

Successfully posted