மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

Sep 12, 2021 05:23 PM 1290

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

image

 

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மாணவன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள், பாலசுப்பிரமணியன், மணி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.


நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து மாணவர்களை குழப்பிய திமுக, நீட் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவ-மாணவிகளை தயார் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted