அயல்நாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி ட்விட்

May 12, 2021 09:32 PM 608

அயல்நாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்குமாறு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அயல்நாடுகளில் மருத்துவம் படித்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு, மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட வாய்ப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

Comment

Successfully posted