பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

Sep 14, 2021 03:43 PM 407

பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்தை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன், சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தனர். அப்போது பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்க உள்ளார்.

 

Comment

Successfully posted