அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

May 14, 2021 03:55 PM 654

போதிய ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதை அறிந்து துயரமும், மனவேதனையும் அடைவதாகவும், போதிய ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

Comment

Successfully posted