தமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது-அமைச்சர் தங்கமணி

Nov 21, 2019 08:51 AM 171

தமிழகத்தில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உள்ளதாகவும், மின்வெட்டே வராது எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பாசூரில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்புப் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உள்ளதாகவும், தமிழகத்தில் மின்வெட்டு என்பதே வராது என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் 16 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானதாகவும், இந்த ஆண்டு 17 ஆயிரத்து 500 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Comment

Successfully posted