நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மாணவி உள்பட 8 பேர் கைது

Sep 14, 2021 05:13 PM 1800

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாணவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவர்களுக்கு சிலர் உதவப்போவதாகவும், ஒரு மாணவருக்கு உதவ 30 லட்சம் கேட்பதாகவும் ராஜஸ்தான் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நீட் தேர்வு மையத்தில் ராஜஸ்தான் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், நீட் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வெளியாட்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று மாணவிக்கு உதவியது தெரியவந்தது. 2 மணிக்கு தேர்வு தொடங்கியதும் 2.30 மணியளவில் நீட் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் கசிந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவி, அவரது உறிவனர் சுனில் குமார் யாதவ், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் பயிற்சி மைய உரிமையாளர் நவரதன் சுவாமி, விடையைத் தயார் செய்த அனில் யாதவ் மற்றும் சந்தீப், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங்கிற்கு அனுப்பிய பங்கஜ் யாதவ் ஆகியோரையும் ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Comment

Successfully posted