பெயிண்டர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Mar 05, 2020 09:44 PM 740

சென்னை சங்கர் நகரில் பெயிண்டர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்

சென்னை சங்கர்நகர் பகுதியில், பெயிண்டர் சங்கர் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற 8 பேரினை அப்பகுதி காவல்துறை வலைவீசி தேடிவந்தனர். இச்சம்பவம் ஆள்மாறாட்டம் காரணமாக நடந்ததா? முன்விரோதம் காரணமாக நடந்ததா? என சிசிடிவி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தற்போது சங்கர் நகர் காவல்துறையினர் வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 8 பேரினை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

Comment

Successfully posted