தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

Apr 27, 2021 12:12 PM 1329

கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 8-வது கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

5 மாநிலத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளன.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும், வெற்றி சான்றிதழைப் பெற செல்லும் வேட்பாளர்களுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted