அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்

May 26, 2019 08:42 PM 147

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இது தவிர ஆந்திர பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டன.

தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் அமலில் இருந்தன. இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted