அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Mar 01, 2021 10:36 AM 2574

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத்தொடர்ந்து வாகன சோதனை, தேர்தல் விதிமீறல்கள், கண்காணிப்பு என தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

 

Comment

Successfully posted