உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் கெடு

Apr 07, 2021 08:19 AM 952

மறைந்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திமுக தலைவரும் அதன் முக்கிய நிர்வாகிகளும் இழிவான விமர்சனங்களையும் தனிமனித தாக்குதல்களையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக எம்.பி. ஆ.ராசா, முதலமைச்சரின் தயாரை கொச்சைப்படுத்தும் அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொண்டார். தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடியின் சித்ரவதை காரணமாகத்தான் உயிரிழந்ததாக கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு தேசிய அளவில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சுஷ்மா சுவராஜின் மகள் உதயநிதியின் பேச்சுக்கு டிவிட்டர் வாயிலாக கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில் சர்ச்சை கருத்து தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comment

Successfully posted