அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை 2வது நாளாக தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்!

Mar 25, 2021 07:52 PM 2056

சென்னை கொளத்தூர் தொகுதியில் அனுமதியின்றி வீடுகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை, தொடர்ந்து இரண்டாவது நாளாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அகற்றினர்.

கொளத்தூர் தொகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கொளத்தூர் தொகுதியில் திமுகவினர் அனுமதியின்றி வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிருந்தார். மேலும், திமுகவினர் ஒட்டிய ஸ்டிக்கர்களை தேர்தல் ஆணையம் அகற்ற வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம்.காலனி 20வது தெரு, திரு.வி.நகர் கென்னடி சதுக்கம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட திமுக ஸ்டிக்கர்களை, தொடர்ந்து இரண்டாவது நாளாக தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.


Comment

Successfully posted