இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

Oct 10, 2019 10:11 AM 58

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பணப் பட்டுவாட்டா மற்றும் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பது ஆகியவற்றை தடுக்கும் வகையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் - ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனையிடப்பட்டு வருகின்றன.

Comment

Successfully posted