தேர்தல், திருவிழாவையொட்டி தனித்தனி குழுக்கள் அமைப்பு

Apr 15, 2019 05:48 PM 53

தேர்தலும், சித்திரை திருவிழாவும் ஒரே நேரத்தில் வருவதால், தனித் தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொது தேர்தல் பார்வையாளர் வினோத்குமார், மாவட்ட ஆட்சியர் நடராஜன், காவல் ஆணையர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நடராஜன், வாக்கு எண்ணும் மையத்தில் சிறுசிறு மாற்றங்களை செய்ய, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார். தேர்தலும், திருவிழாவும் ஒரே நேரத்தில் வருவதால், தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் கூறினார்.

Comment

Successfully posted