மம்தா போட்டியிடும் தொகுதி உட்பட 69 தொகுதிகளில் நாளை தேர்தல்

Mar 31, 2021 10:23 AM 762

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இங்கு முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னதாக இந்த தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

Comment

Successfully posted