"சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றி சுமுகமாக தேர்தல் நடைபெற்றது"

Apr 07, 2021 08:27 AM 292

சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் தேதி அறிவித்த தினத்தில் இருந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார். பிரசாரத்தின் போது ஏற்பட்ட பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்ததாக தெரிவித்தார். மேலும், 30 ஆயிரம் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்ததாகவும் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

image

Comment

Successfully posted