கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும்

Feb 11, 2019 12:16 PM 87

வனத்துறையின் அனுமதி கிடைத்ததும் கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்க தேவையான இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக சுட்டிக் காட்டினார். இதனால் வனத்துறையின் அனுமதி கிடைத்ததும் கூடலூரில் கோட்ட மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Comment

Successfully posted