கூடன்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

Feb 11, 2019 08:41 AM 114

கூடன்குளம் 2-வது அணு உலையில், இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து, தற்போது மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடம்குளம் அருகே அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரண்டு அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி இயந்திர கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. தற்போது, 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது.

Comment

Successfully posted