கிருஷ்ணகிரி குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை

Apr 16, 2019 03:22 PM 103

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள ராமபுரம் தோட்டத்தில் ஒற்றை யானை வந்ததை பார்த்து சிபிரப்பா என்ற விவசாயி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அவரை துரத்தி வந்த யானை, அவரை தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனிடையே, கோபசந்திரம் தேர்த்திருவிழா துவங்கி உள்ளது. சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்கள் இந்த விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Comment

Successfully posted