தலமலை வனப்பகுதி சாலைகளில் யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Jul 16, 2019 05:48 PM 276

தாளவாடி அடுத்த தலமலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதாலும், தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்கின்றன.

அந்த வழியாக செல்லும் வாகனங்களை சில யானைகள் துரத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தலமலை வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted