யானைகள் புத்துணர்வு முகாம் இன்று முதல் துவக்கம்

Dec 15, 2019 06:30 AM 244

இன்று தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாம் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று முதல் 48 நாட்களுக்கு யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு வனத்துறையின் உதவியுடன் சத்தான உணவு, மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்தும் யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாமானது, யானைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Comment

Successfully posted