யானைகள் புத்துணர்வு முகாம் நாளை தொடக்கம்

Dec 14, 2019 01:10 PM 173

 நாளை முதல் துவங்கவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமிற்காக   திருச்சி ,நெல்லை மாவட்டத்திலிருந்து 3 யானைகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நாளை முதல் 48 நாட்களுக்கு யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு வனத்துறையின் உதவியுடன் சத்தான உணவு, மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

அந்த வகையில், இந்தாண்டு தொடங்கவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி புறப்பட்டு சென்றது. அதேபோல், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் யானை சுந்தரவல்லி, குறுங்குடிவல்லி யானைகளும் வாகனம் மூலம் புத்துணர்வு முகாமுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்தும் யானைகள் இந்த புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், யானைகள் நலவாழ்வு முகாமிற்கு, திருச்சியிலிருந்து ஆண்டாள், லட்சுமி, அகிலா ஆகிய மூன்று 3 யானைகள், லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. யானைகளுடன் அதன் பாகன்களும், கால்நடை மருத்துவக் குழுவும் சென்றனர். இதற்காக, திருச்சி அம்மா மண்டபம் பகுதியில், யானைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மண்டல இணை ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயற்கை எழில் சூழந்த வனப்பகுதியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாமானது, யானைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமாய் இருப்பதாக, மண்டல இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்தார்.
 

Comment

Successfully posted