வறட்சி காலம் துவங்கியுள்ளதால் சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள்

Feb 12, 2020 02:24 PM 136

கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் வனப்பகுதியில், சாலையோரம் யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள்  என ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக வசந்தகாலம் நிலவி வந்த நிலையில், தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், உணவுக்காக யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளன. எனவே பண்டிப்பூர், புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் எனவும், எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் பண்டிப்பூர் புலிகள் காப்பக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

Comment

Successfully posted