காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

May 07, 2021 02:03 PM 1604

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

கொரோனா 2-வது அலை உச்சம் அடைந்திருக்கும் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் முழுமையாக நிரம்பியதால் சிகிச்சைக்கு வருபவர்கள் மருத்துவமனை வளாகங்களில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புகுள்ளாகி சிகிச்சை பெற்ற வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். நோயாளிகள் இறப்பிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என குற்றச்சாட்டப்படும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

 

Comment

Successfully posted