தலைமைச்செயலகத்தில் 10 அமைச்சர்கள் அவசர ஆலோசனை!!

Aug 15, 2020 02:53 PM 1446

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மூத்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் அவசரமாக ஆலோசனை மேற்கொண்டனர். சிறிது நேரம் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள், அங்கிருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்று, அவருடன் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை நிறைவடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்ற அமைச்சர்கள், அவருடன் ஆலோசனை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் ஆலோசனைக்கு பிறகு, மீண்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர். ஆலோசனைக்கு பிறகு அஇஅதிமுக தலைமை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted