ஜிம்பாப்வே அதிபராக எமர்சன் மங்காக்வா தேர்வு

Aug 03, 2018 03:07 PM 211

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் அதிபராக இருந்த  ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது.  இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அவரது கட்சியும் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையம், 50 புள்ளி 8 சதவீத வாக்குகளை பெற்ற மங்காக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டு நெல்சன் சாமிசா 44 சதவீத வாக்குகளை  மட்டுமே பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted