ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

Sep 16, 2019 09:31 AM 273

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் வீரர்களின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால், 78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது. 4ஆம் நாளின் பேட்டிங்கைத் தொடர்ந்த இங்கிலாந்து எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் சிறப்பாக ஆடிய மேத்யூ வேடு 117 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின் களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

Comment

Successfully posted