பள்ளிகளில் சாதிப்பிரிவினைகள் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

Aug 13, 2019 03:01 PM 107

பள்ளிகளில் சாதிப்பிரிவினைகள் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில், வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதாகவும் இதனால் பள்ளிகளிலே பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவ்வாறு செயல்படுபவர்களை கண்டறிந்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தலைமை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தலைமை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Comment

Successfully posted