யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பு

Mar 18, 2020 09:13 AM 687

கொரோனா எதிரொலியால், ஜுன் மாதம் தொடங்கவிருந்த யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தபடியாக மிக பிரபலமானதாகக் கருதப்படுவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி. 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் ஜுலை மாதம் வரை, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், அதன் தலைவர் அலெக்ஸாண்டர் செப்ரின் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இதில், 55 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியை, அடுத்த ஆண்டு ஜுன் 11ம் தேதி முதல், ஜுலை 11ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Comment

Successfully posted