"அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை"-கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

Dec 06, 2021 03:11 PM 2312

அண்ணா திமுகவின் இரட்டை தலைமையை தொண்டர்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அண்ணா திமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் உருவ சிலைக்கு மரியாதை செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார்.

image

அப்போது, அண்ணா திமுகவின் இரட்டை தலைமையைத் தொண்டர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். சசிகலாவும் தினகரனும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் காரை மறித்து, அமமுக-வினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு அவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.


Comment

Successfully posted