பூம்புகாரில் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

Aug 18, 2018 03:37 PM 670

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடைபெறும்புத்தக கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்இந்தக் கண்காட்சியில் ஒரு கோடி நூல்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 27ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் மூலம், பூம்புகார் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார். தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்றும், மதுரையிலும், தரமணியிலும் நூலகங்கள் அமைக்க 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Comment

Successfully posted