மகாவிஷ்ணு சிலை செஞ்சி கோட்டை வழியாக கொண்டுச் செல்ல தொல்லியல்துறையின் அனுமதிக்கு எதிர்பார்ப்பு

Dec 24, 2018 07:59 AM 586

செஞ்சி-சேத்பட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மகாவிஷ்ணு சிலையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரம்மாண்டமான மகாவிஷ்ணு சிலையை புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செஞ்சி கோட்டை வழியாக கொண்டுச் செல்ல தொல்லியல்துறை அனுமதி அளிக்காததால் சாலையோரம் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மகாவிஷ்ணு சிலையை வழிபட்டனர். இதனிடையே தொல்லியல்துறையின் அனுமதி கிடைத்ததும் செஞ்சி கோட்டையை கடந்து மகாவிஷ்ணு சிலை எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted