நீட் தேர்வுக்கான பயிற்சியை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை!!

Jul 10, 2020 12:24 PM 814

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் ஏழாயிரம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். இம்மாணவர்களுக்கு இ-பாக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted