கணவரை கொன்ற தெய்வீக கள்ளக் காதல்...

Jul 11, 2021 05:01 PM 1082

நெல்லை அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்று விட்டு வாசற்படியில் வழுக்கி விழுந்து இறந்ததாக கதை கட்டிய மனைவி, போலீஸ் விசாரணையில் உலறிக் கொட்டி சிக்கினார்.

 

நான்குநேரி பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா. இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன் சுந்தர் என்பவரை காதலித்து வந்த இவர், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் 10 ஆண்டுகளுக்கு முன் முத்துக்குமார் என்பவரை மணந்துள்ளார்.

மனம் போல் அமையாத மண வாழ்க்கையில் கணவருடனான வாழ்க்கையில் காதல் துளியும் இல்லை.

சுமிக்கு கணவன் மீதுதான் காதல் வர வில்லையே தவிர, சுந்தர் மீதான காதல் குறையவே இல்லை. இதனால் குழந்தைகளை கவனிக்காமல், குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தாமல் முன்னாள் காதலனோடு மூர்க்கமாக நெருக்கம் காட்டியுள்ளார் சுமி.

ஊர் அறிந்த இந்த ஜோடி கிளிகளின் சுற்றுலா, கணவனின் காதுகளை எட்டவே கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி காலை வீட்டு வாசலில் குப்புறபடுத்த நிலையில் அசைவின்றி கிடந்தார் முத்துக்குமார்.

உறவினர்கள் அவரை பதறி அடித்து மருத்துவனைக்கு தூக்கி சென்றனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக அதிர்ச்சியை கிளப்பியது.

போலீசார், நடத்திய விசாரணையில் தந்தி இயந்திரம் போல தறிகெட்டு உளறியுள்ளார் சுமி.  இதையடுத்து தனியாக அழைத்து சென்று அவர் மீது சிறப்பு கவனம் செலுத்தினர் போலீசார்.

இதில் தன் கணவனை, தனது காதலனோடு சேர்ந்து கொன்றதையும் அவர் சடலத்தை படியில் அருகில் தூக்கி வந்து போட்டதையும் சுமித்ரா ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரையும் அவரது தெய்வீக காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted