மனைவியை கொன்றுவிட்டு , தற்கொலை நாடகம்... கள்ளக்காதல் ஜோடி கைது...!

Oct 11, 2021 04:54 PM 818

திருப்பத்தூர் அருகே, காதல் மனைவியை எரித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்ய போவதாக நாடகமாடிய கொடூர கணவன், தனது கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.

தனியார் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த இவர், அவரது பயிற்சி பள்ளிக்கு வந்த திவ்யா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது பயிற்சிப் பள்ளிக்கு வரும் பெண்களிடம் எல்லை மீறும் மன்மத ஓட்டுனரிடம், சில மாதங்களுக்கு முன் கார் பழக வந்துள்ளார் அர்ச்சனா.

கட்டிய மனைவி வீட்டில் இருக்க, வேலை செய்யும் இடத்தில் கள்ளக்காதலியுடன் மெய் மறந்து இருந்துள்ளார் சல்லாப நாயகன் சத்தியமூர்த்தி.

ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கொன்று விட்டு, அர்ச்சனாவுடன் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்தார்.

இந்நிலையில், கடந்த 25 ம் தேதி, கோயிலுக்கு செல்லாலாம் எனக் கூறி, திவ்யாவை குழந்தைகளுடன் அழைத்துச் சென்ற சத்தியமூர்த்தி, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கியதும் எரித்துக் கொன்று விட்டு, தலைமறைவானார்.

image

அதற்குமுன், தனக்கு 2 சிறு நீரகமும் செயல் இழந்து விட்டதாகவும், தனக்கு பிறகு மனைவியை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதால், அவரை தீ வைத்து எரித்து விட்டு, தானும் சாகப்போவதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திவ்யாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டதில், சல்லாப நாயகன் சத்தியமூர்த்தி கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருக்க, மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை அமைத்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, மகள் அர்ச்சனாவை சத்தியமூர்த்தி கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை புகார் அளித்தார்.

அதன் பேரில் மற்றொரு தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, கொலையாளி சத்தியமூர்த்தி கூடுதலாக வைத்திருந்த செல்போனுக்கு புதிய எண்ணை வாங்கி, கடந்த வெள்ளிக்கிழமை ஆன் செய்துள்ளார்.

அப்போது அந்த டவரை வைத்து தஞ்சாவூரில் புதுக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த கள்ளக் காதல் ஜோடியை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Comment

Successfully posted