தானா சேர்ந்த கூட்டம் படம் போல கூட்டமாக சென்று, கொள்ளையில் ஈடுபட்ட போலி வருமான வரித்துறை அதிகாரிகள்

Sep 19, 2021 06:25 PM 741

ராணிப்பேட்டை மாவட்டத்தில், திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் திட்டமிட்டு லாவகமாக கைது செய்தனர்.

ஆற்காடு பகுதியை தொழிலதிபரான ஆட்டோ கண்ணன் என்பவரின் வீட்டில், கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி, மர்ம கும்பல் ஒன்று வருமானத் துறை அதிகாரிகள் போல் நடித்து, 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, சென்னை மற்றும் ஆற்காடு பகுதியை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்களை, இரண்டு தனிப்படைகள் கொண்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.

image

அப்போது, இந்த கொள்ளை வழக்கில் மேலும், 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த நரேந்திர நாத், ராஜேஷ், பரமகுரு, ஐயப்பன் மற்றும் சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted