திருப்பூரில் போலி வழக்கறிஞர் கைது

Jul 11, 2019 09:12 PM 97

சென்னை தண்டயார் பேட்டையை சேர்ந்த போலி வழக்கறிஞர் செல்வராஜ் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் டவுன் ஹால் அருகே உள்ள டீ கடையில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் , வழக்கறிஞர் ஒருவருடன் தகராறு செய்துள்ளார். தானும் ஒரு வழக்கறிஞர் தான் என செல்வராஜ் கூறவே , அவரிடம் இருந்த அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த போது போலியாக அச்சிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனிடையே போலி வழக்கறிஞர் செல்வராஜை பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சென்னை தண்டயார் பேட்டையை சேர்ந்தவர் என்பதும், அடிக்கடி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம்,நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் வழக்கறிஞர் என கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

Comment

Successfully posted