பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக சரிவு

Dec 21, 2019 01:10 PM 331

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக குறைந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பிலிகுண்டுலுவுக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது குறைந்து 4,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 136வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4, 100 கன அடியாக குறைந்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 3 , 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 400 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
 

Comment

Successfully posted