சிவனடியார் தற்கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை!

Aug 21, 2020 09:35 PM 2092

தற்கொலை செய்துகொண்ட நிலையில் , இதற்கு உரிய நீதி வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல் காடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தீவிர சிவ பக்தர் ஆவார். சிவனை வழிபடுவதோடு மட்டுமின்றி, தாயத்து கட்டுவது ,பேய் ஓட்டுவதுவது உள்ளிட்டவற்றையும் செய்துவந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கே வந்த தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி என்பவர், சிவனடியார் சரவணனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தை சரவணன் மகன் சங்கர், மகள் கவிதா ஆகிய இருவரும் நேரில் கண்டுள்ளனர். தனது குழந்தைகள் முன்பே தன்னை அடித்ததால் மனமுடைந்த சரவணன் தனது குடும்பத்தாருடன் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சனிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை காட்டுப்பகுதியில் சிவனடியாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் மரணத்திற்கு காரணம், எஸ்.ஐ. மைக்கேல் அந்தோணி தான் என சாமியார் வெளியிட்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில் சிவனடியார் தற்கொலைக்கு காரணமான துணை ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தவறு செய்யாத தன் தந்தையை எஸ்.ஐ. வேண்டுமென்றே அடித்து அவமதித்ததாக அவரது மகன் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comment

Successfully posted