நெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்

Jun 15, 2019 12:47 PM 247

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நெருப்பு குமராக இடம்பிடித்துள்ள அருண்ராஜா காமராஜுக்கு இன்று பிறந்த நாளாகும்.

ராஜா ராணி, மான் கராத்தே போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். துவக்கத்தில் காமெடியனாக அனைவராலும் பார்க்கப்பட்டார். அருண்ராஜா காமராஜ், இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றிருந்த "கனா" திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

முன்னதாக, தெறி, பென்சில், ஜிகர்தண்டா மற்றும் கபாலி ஆகிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் இடம்பெற்றிருந்த 'நெருப்பு டா' என்ற பாடல் அனைவரிடையே நெருப்பாய் பற்றிக் கொண்டது. மேலும், விஜய் நடித்த பைரவா படத்தில் "வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா" என்ற பாடலம் திரையரங்கின் இருக்கைகளை அதிரவைத்தது.

மேலும், இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளியான "நட்புனா என்னானு தெரியுமா" என்ற படத்தில் இவரது டைமிங் காமெடிகள் ரசிக்கும்படி உள்ளது.

இந்நிலையில், நெருப்பு குமார் அருண்ராஜா குமாருக்கு இன்று பிறந்த நாளாகும். இதனை, ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #HBDArunRajaKamaraj என்ற ஹேஸ்டாக் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடன் பணியாற்றிய திரையுலக நண்பர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Comment

Successfully posted