ஆத்தூர் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டி படுகொலை

Jun 16, 2019 04:12 PM 84

ஆத்தூர் அருகே நிலத்தகராறில் விவசாயி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் நடுவலூர் ஆயக்காரர் பள்ளத்தில் 70 வயதான கந்தசாமி என்பவர் வசித்து வந்தார். இருவருக்கு பரந்தாமன், சின்னசாமி என்ற மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், கந்தசாமிக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே இருக்கும் 6 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மணி என்பவர் உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கந்தசாமி, புறம்போக்கு நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை ஏற்று அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணி, மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற கந்தசாமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதனையடுத்து தலைமறைவான மணியை போலீசார் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted