தர்பூசணி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Feb 03, 2019 08:52 AM 93

தர்பூசணி விளைச்சல் அமோகமாக இருப்பதால், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தர்பூசணி நல்ல விளைச்சல் தந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைப்பதாகவும், செலவினம் போக 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comment

Successfully posted