கரும்பு அறுவடையினால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

Feb 15, 2019 09:21 AM 298

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு அறுவடையினால், நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராமத்தில் பெரும்பாலனோர் கரும்பு பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடை பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்பு சக்கரை ஆலைக்கு அனுப்படுவதாகவும், இது ஒரு வருட பயிர் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை செலவாவதாகவும் செலவினங்கள் போக, 2 ஏக்கருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted