டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள்!

Jan 07, 2021 01:04 PM 3243

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 42ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, தலைநகர் டெல்லி எல்லையில், 42-வது நாளாக விவசாயகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயகள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள விரைவு சாலைகளில் விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக சென்றனர்.

image

அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்க ஹரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி சென்றனர். விவசாயிகளில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசுடன் நாளை 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

டிராக்டர் பேரணி ஒத்திகையில் பங்கேற்க டெல்லி வரும் விவசாயிகளை தடுத்து, திருப்பி அனுப்ப, மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா - டெல்லி எல்லையான குண்டலி - மானேசர் - பல்வால் சுங்கச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted