கீழ்பென்னாத்தூர் அருகே மரவள்ளிக்கிழக்கு பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Dec 16, 2018 03:00 PM 316

மரவள்ளிக்கிழக்கு பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் கிராமத்தில் பலரும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி கிழங்கு பயிரிட குறைந்த செலவு மற்றும் குறைந்த தண்ணீரே தேவை என்பதால், பலரும் ஆர்வமுடம் இதனை பயிரிட்டு வருகின்றனர்.

ஏக்கருக்கு 10 டன் முதல் 15 டன் வரை மகசூல் கிடைப்பதால் செலவினங்கள் போக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். செலவு குறைவு, வேலை ஆட்கள் குறைவு, வியாபாரிகள் நேரடி கொள்முதல் ஆகியவை காரணமாக மற்ற பயிர்களை விட லாபகரமான பயிராக மரவள்ளி கிழக்கு உள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

Comment

Successfully posted